ஆலகாலம் பல

உறவில் அவ்வியம் விஷம் நட்பில் துரோகம் விஷம் நிறத்தில் பேதம் விஷம் அகத்தில் அழுக்காறு விஷம் ஆதிக்கத்தில் ஆணவம் விஷம் நாத்திகமாய் இழித்தல் விஷம் ஊனம் நகைத்தல் விஷம் கொடுமைக் கண் மெளனம் விஷம் எளியோர் மேல் வலிமை விஷம் மற்றவர் திறன் களவு விஷம் நமக்குள் ஆண்டாண்டாய் ஊறிய...

கண்மாய் மீன்களும் கால் சட்டை சிறுவர்களும்

பேய் மழையே இனியும் வாராதே போ போ வானம் பார்த்து வாழ்ந்த கரிசல் காட்டவர் ஓலமாய் வைகின்றனர். காலங்காலமாய் கட்டாந்தரையாய் கிடந்த காட்டாறு கரை புரண்டோடி தட்டி ஓலைக் குடிசையோடு சட்டிப் பானைகளும் கறவைகளும் தளிரும் சறுகுமாய் உயிர்களும் அடித்துச் செல்லப்பட்டால் சபிக்கத்தானே...

வானவில்

ஓடிவா ஓடிவா எங்கே எங்கே அதோ பார் அங்கே அங்கே! அருணனும் வருணனும் நேரெதிர் சந்தித்த  கொண்டாட்டமோ முகில் இழை கோர்த்து விண் பட்டாடையில் வண்ண ஜரிகைத் தைத்தனரோ? வளைவின் முடிவில் பொன் பானையுண்டாம் பொத்திக் காக்கும் சித்திரக் குள்ளனுண்டாம் புள்ளினம் மகிழும் முல்லை நிலமுண்டாம்...

பிடித்தப் பாடல்

ஒலிக்கு மனதில்  ஒர் ஒளியுருவம் விழித் திறப்பை ஒத்தி வைக்கச் சொல்லும் நொடி நீண்டு யுகமாகக் கெஞ்சும் அட்சர ஸ்ருதியில் லயமாய்க் கரைந்து மீண்டும் மீண்டும் மூழ்கத் தூண்டும் மிகப் பிடித்தப்  பாடல் என்றென்றும் ரசித்தல் இனிது!                                ...

தொலைந்திட வேண்டும்

தொலைந்திட  வேண்டும்… காட்டுக்குள்ளே தொலைந்திட  வேண்டும்… திசைக்கு சூரியன் வழிக்கு விண்மீன் குடிக்கத் தேன் சுனை புசிக்க மலைக் கனி! அடைந்திட அணில் பொந்து தூளியாட நெடு விருட்சம் அயர்ந்திட புல் படுக்கை ரசித்திட பால் வெளி! ஆடிக் களிக்க மயிலும் ஆனையும்...